பீதர் -- சாம்ராஜ்நகர் வரை செப்., 15ல் மனித சங்கிலி
பீதர் -- சாம்ராஜ்நகர் வரை செப்., 15ல் மனித சங்கிலி
ADDED : ஆக 27, 2024 05:02 AM

பெங்களூரு : ''செப்., 15ம் தேதி 'சர்வதேச ஜனநாயக தினம் கொண்டாடப்படும். அன்று பீதரில் இருந்து சாம்ராஜ்நகர் வரை மனித சங்கிலி அமைக்கப்படும்,'' என, சமூக நலத்துறை அமைச்சர் மஹாதேவப்பா தெரிவித்தார்.
பெங்களூரு விதான் சவுதாவில் நேற்று சர்வதேச ஜனநாயக தின முன்னேற்பாடுகள் குறித்து, சமூக நலத்துறை அமைச்சர் மஹாதேவப்பா, துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
பின், அவர் அளித்த பேட்டி:
மாநில அரசு சார்பில் செப்., 15ம் சர்வதேச ஜனநாயக தின விழா கொண்டாடப்படும். இதன் ஒரு பகுதியாக, ஜனநாயகத்தின் பலத்தை நிரூபிக்கும் வகையில், பீதரில் இருந்து சாம்ராஜ்நகர் வரை மனித சங்கிலி அமைக்கப்படும். இதற்கு அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் பொறுப்பு வகிப்பர்.
இதில் 40 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பர். அடுத்த தலைமையினருக்கு உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு, நம் நாடு என்பதை உணர்த்தும் வகையில், இவ்விழா கொண்டாடப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.