பீஹார் பாலம் அடுத்தடுத்து "டமால்": காரணம் கேட்டு மாநில அரசுக்கு கோர்ட் நோட்டீஸ்
பீஹார் பாலம் அடுத்தடுத்து "டமால்": காரணம் கேட்டு மாநில அரசுக்கு கோர்ட் நோட்டீஸ்
ADDED : ஜூலை 29, 2024 03:06 PM

புதுடில்லி: பீஹாரில் பாலங்கள் அடுத்தடுத்து இடிந்து விழுவது குறித்து, அம்மாநில அரசு மற்றும் நெடுஞ்சாலைத்துறை பதில் அளிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
பீஹார் மாநிலத்தில் முதல்வர் நிதீஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, கடந்த சில நாட்களாக அடுத்தடுத்து புதிய மற்றும் பழைய பாலங்கள் இடிந்து விழும் சம்பவங்கள் நடந்தன. சமீபத்தில் அடுத்தடுத்து 10க்கு மேற்பட்ட பாலங்கள் இடிந்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
உத்தரவு
இந்த மனு இன்று(ஜூலை 28) தலைமை நீதிபதி சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் ஜே.பி பார்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. பாலங்கள் அடுத்தடுத்து இடிந்து விழுவது குறித்து அம்மாநில அரசு மற்றும் நெடுஞ்சாலைத்துறை பதில் அளிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. பாலங்கள் இடிந்து விழக்காரணம் என்ன? என்பது குறித்து விசாரிக்க ஒரு குழுவை அமைக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.