ADDED : ஏப் 04, 2024 05:04 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஜே.பி., நகர் : பெங்களூரு ஜே.பி., நகர் சாமுண்டிநகரில் வசிக்கும் மக்கள், நேற்று முன்தினம் இரவு தங்கள் வீடுகள் முன், பைக்குகளை நிறுத்தி இருந்தனர். நள்ளிரவில் அங்கு வந்த மர்மநபர்கள் சிலர், ஐந்து பைக்குகள் மீது பெட்ரோலை ஊற்றி, தீ வைத்துவிட்டு தப்பினர்.
தீ பரவி, ஒரு வீட்டின் ஜன்னலில் பிடித்தது. அந்த வீட்டில் வசித்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அலறி அடித்து கொண்டு வெளியே வந்தனர். ஜன்னலில் பிடித்த தீயை, தண்ணீரை ஊற்றி அணைத்தனர். அதன் பின்னர், பைக்குகள் மீது பிடித்த தீயும் அணைக்கப்பட்டது.
ஆனாலும் ஐந்து பைக்குகளும் எரிந்து நாசமாகின. குடிபோதையில் மர்மநபர்கள், பைக்கிற்கு தீ வைத்து இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்து உள்ளது.

