தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ பா.ஜ., - எம்.எல்.சி., நஞ்சுண்டி ராஜினாமா

பா.ஜ., - எம்.எல்.சி., நஞ்சுண்டி ராஜினாமா

பா.ஜ., - எம்.எல்.சி., நஞ்சுண்டி ராஜினாமா


ADDED : ஏப் 24, 2024 12:59 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 24, 2024 12:59 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு, : பா.ஜ., - எம்.எல்.சி., நஞ்சுண்டி பதவியை ராஜினாமா செய்தார். இதற்கு சட்டமேலவை தலைவர் பசவராஜ் ஹொரட்டி வருத்தம் தெரிவித்துள்ளார்.

கர்நாடக சட்டமேலவையில் பா.ஜ., - எம்.எல்.சி.,யாக இருந்தவர் நஞ்சுண்டி, 58.

இவர் முன்பு காங்கிரசில் இருந்தார். 2017ல் காங்கிரசில் இருந்து விலகி பா.ஜ.,வில் இணைந்தார். 2018ம் ஆண்டு எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவுடன் எம்.எல்.சி.,யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது பதவிக் காலம் ஜூன் 17ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.

நஞ்சுண்டி காங்கிரஸ் தலைவர்களுடன் தொடர்பில் இருப்பதாகவும், மீண்டும் காங்கிரசில் இணைய போவதாகவும், சில மாதங்களாக தகவல் வெளியாகி வந்தது.

இது உண்மை என்று நிரூபிப்பது போல நேற்று முன்தினம், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயை, நஞ்சுண்டி சந்தித்து பேசி இருந்தார்.

அநீதி நடந்தது


இந்நிலையில் ஹூப்பள்ளியில் உள்ள வீட்டில், சட்ட மேலவை தலைவர் பசவராஜ் ஹொரட்டியை, நஞ்சுண்டி நேற்று சந்தித்தார். எம்.எல்.சி., பதவியை ராஜினாமா செய்வதாக கடிதம் கொடுத்தார்.

பின்னர் நஞ்சுண்டி அளித்த பேட்டி:

எனக்கு ஏழு ஆண்டுகள் ஆதரவு கொடுத்த பா.ஜ., தலைவர்கள், தொண்டர்களுக்கு நன்றி. அரசியல் எனது தொழில். எனது விஸ்வகர்மா சமூகத்திற்கு நல்லது செய்ய அரசியலுக்கு வந்தேன். பிற்படுத்தப்பட்ட மக்களின் குரலாக என்னை பா.ஜ., பயன்படுத்தும் என்று நினைத்தேன். ஆனால் அது நடக்கவில்லை.

எம்.எல்.சி.,யாக இருந்து மட்டும், எனது சமூகத்தை காப்பாற்ற முடியாது. எங்கள் சமூகத்திற்கு அநீதி நடந்துள்ளது. என்னையும் கட்சியில் புறக்கணித்தனர்.

இதனால் எம்.எல்.சி., பதவியை ராஜினாமா செய்துள்ளேன். பா.ஜ., ஆட்சியில் இருந்தபோது, எனக்கு அமைச்சர் பதவி கொடுத்திருக்க வேண்டும்.

பிரதமர் நரேந்திர மோடி, கட்சி மீது குறை சொல்ல மாட்டேன். மரியாதை கிடைக்காத இடத்தில் இருக்க வேண்டாம் என்று, கடந்த இரண்டு ஆண்டுகளாக எனது சமூகத்தினர் என்னிடம் கூறினர்.

இவ்வாறு அவர் கூறினார்.

நஞ்சுண்டி இன்று மீண்டும் காங்கிரசில் இணைய உள்ளார்.

பணபல அரசியல்


நஞ்சுண்டி ராஜினாமா குறித்து, சட்ட மேலவை தலைவர் பசவராஜ் ஹொரட்டி கூறியதாவது:

நஞ்சுண்டியிடம் உங்களை ராஜினாமா செய்ய சொல்லி யாராவது கட்டாயப்படுத்தினரா என்று கேட்டேன். அவர் இல்லை என்று கூறினார். இதனால் அவரது ராஜினாமா கடிதம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

கண்ணியமானவர்கள் அரசியலில் இருக்கக் கூடாது என்ற சூழ்நிலை உருவாகி உள்ளது. எனது தலைவர் பொறுப்பின்போது 13 பேர் எம்.எல்.சி., பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

அரசியல் நெறிமுறைகள் குறைந்துவிட்டன. பணம் கொடுத்து ஓட்டு வாங்கினால், ஜனநாயகத்திற்கு மதிப்பு இல்லை. முன்பு எழுத்தாளர்கள், சமூக சேவை செய்தவர்கள் எம்.எல்.சி.,க்களாக இருந்தனர். இப்போது பண பலத்தில் அரசியல் நடக்கிறது. அரசியலமைப்பு சட்டத்தை யாரும் தவறாக பயன்படுத்த கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us