காங்., வேட்பாளரை ஆதரிக்க பா.ஜ., - எம்.பி., உத்தரவு?
காங்., வேட்பாளரை ஆதரிக்க பா.ஜ., - எம்.பி., உத்தரவு?
ADDED : ஏப் 25, 2024 05:38 AM

சாம்ராஜ்நகர் : சாம்ராஜ்நகர் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரிக்க, பா.ஜ., - எம்.பி., சீனிவாச பிரசாத் தங்களுக்கு உத்தரவிட்டு இருப்பதாக, ரசிகர் மன்ற தலைவர் சிவகுமார் கூறினார்.
சாம்ராஜ்நகர் பா.ஜ., - எம்.பி., சீனிவாச பிரசாத் ரசிகர் மன்ற தலைவர் சிவகுமார் அளித்த பேட்டி:
வயதாகிவிட்டதால் தேர்தல் அரசியலில் இருந்து, ஓய்வு பெறுவதாக சீனிவாச பிரசாத் அறிவித்துவிட்டார். அவர் பா.ஜ.,வில் இருந்தபோது, அவரை கட்சி மதிக்கவில்லை. சட்டசபை, எம்.எல்.சி., தேர்தலில் அவரது கருத்தை, யாரும் கேட்கவில்லை. அரசியல் ஓய்வு அறிவித்த பின்னர், சீனிவாச பிரசாத்துடன் ஆலோசனை நடத்தினோம்.
சாம்ராஜ்நகரில் காங்கிரஸ் வெற்றி பெறும், சூழ்நிலை இருப்பதாக கூறினார். காங்கிரஸ் வேட்பாளரை ஆதரிக்கும்படி, எங்களிடம் கூறினார். இதனால் அவரது ஆதரவாளர்கள் காங்கிரசில் இணைந்தனர்.
சீனிவாச பிரசாத்தின் ஒரு மகன் தீரஜ் பிரசாத், காங்கிரசில் இணைந்துவிட்டார். இன்னொரு மருமகன் மோகன் பா.ஜ.,வில் இருந்தாலும், எங்களுக்கு ஆதரவாக இருக்கிறார். காங்கிரஸ் வேட்பாளர் சுனில் போஸ் வெற்றிக்காக, நாங்கள் வேலை செய்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

