பா.ஜ., தேர்தல் பிரசாரத்தில் 'பிக்பாக்கெட்' கைவரிசை
பா.ஜ., தேர்தல் பிரசாரத்தில் 'பிக்பாக்கெட்' கைவரிசை
ADDED : மார் 28, 2024 05:13 AM
குடகு, : பா.ஜ., தேர்தல் ஊர்வலத்தில், பிக்பாக்கெட் திருடர்கள் கை வரிசையை காண்பித்துள்ளனர்.
குடகு, மடிகேரியில் மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா தலைமையில், நேற்று கட்சி சார்பில் ஊர்வலம் ஏற்பாடு செய்யப்பட்டது. மைசூரு வேட்பாளர் யதுவீருக்கு ஆதரவாக பிரசாரம் செய்யும் நோக்கில், ஊர்வலம் நடந்தது. இதில் முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் போப்பையா, அப்பச்சு ரஞ்சன் உட்பட, பலர் பங்கேற்றனர்.
ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர். கூட்ட நெரிசலை பயன்படுத்தி, பிக்பாக்கெட் திருடர்கள் கைவரிசையை காண்பித்துள்ளனர். அப்பச்சு ரஞ்சனின் பர்ஸ் திருடப்பட்டது. இதில் 20,000 ரொக்கம், பல கார்டுகள், அடையாள அட்டைகள் இருந்தன.
பா.ஜ., தொண்டர் ஒருவரின் 50,000 ரூபாய் திருடப்பட்டது. இதேபோன்று, பலரின் பர்ஸ் பிக்பாக்கெட் அடிக்கப்பட்டுள்ளது. ஐந்து லட்சம் ரூபாய் வரை இழந்துள்ளனர். யதுவீருடன் செல்பி எடுக்க தொண்டர்கள் மேடை அருகில் சென்றனர். இந்த நேரத்தை பயன்படுத்தி திருட்டு நடந்துள்ளது.
“பா.ஜ.,வை சேர்ந்த யாரும், இதை செய்திருக்க வாய்ப்பில்லை. இது வெளியாட்களின் செயல்,” என, அப்பச்சு ரஞ்சன் சந்தேகம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, மடிகேரி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.