பா.ஜ., முன்னாள் எம்.எல்.ஏ., நேரு ஒலேகர் காங்.,கில் ஐக்கியம்
பா.ஜ., முன்னாள் எம்.எல்.ஏ., நேரு ஒலேகர் காங்.,கில் ஐக்கியம்
ADDED : மே 02, 2024 06:47 AM

யாத்கிர்: பா.ஜ., முன்னாள் எம்.எல்.ஏ., நேரு ஒலேகர், காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே முன்னிலையில், நேற்று அக்கட்சியல் இணைந்தார்.
ஹாவேரி தொகுதி பா.ஜ., முன்னாள் எம்.எல்.ஏ., நேரு ஒலேகர், 65. கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில், அவருக்கு 'சீட்' மறுக்கப்பட்டது. இதனால் அவர் அதிருப்தி அடைந்தார். முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை மீது குற்றச்சாட்டு கூறினார். பா.ஜ., தலைவர்கள் சமாதானம் செய்தனர்.
லோக்சபா தேர்தலில், பசவராஜ் பொம்மைக்கு ஹாவேரி சீட் கொடுக்க, நேரு ஒலேகர் எதிர்ப்புத் தெரிவித்தார். ஆனால் மேலிடம் சீட் கொடுத்தது. இதனால் பசவராஜ் பொம்மைக்கு ஆதரவாக, பிரசாரம் செய்யாமல் இருந்தார்.
இந்நிலையில் யாத்கிரில் நேற்று நடந்த காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில், அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே முன், நேரு ஒலேகர் காங்கிரசில் இணைந்தார். அவருக்கு கட்சிக் கொடி கொடுத்து, துணை முதல்வர் சிவகுமார்வரவேற்றார்.

