ADDED : ஜூலை 06, 2024 02:32 AM
ரோஸ் அவென்யூ,:ஆம் ஆத்மி அமைச்சர் கோபால் ராய் கூறியதாவது:
ஆம் ஆத்மி அரசின் பணிகளில் பா.ஜ., பல ஆண்டுகளாக இடையூறுகளை உருவாக்கி வருகிறது. இப்போது அது உச்ச கட்டத்தை எட்டிஉள்ளது.
நாடு மட்டுமின்றி, உலகம் முழுவதும் அறியப்பட்ட டில்லியின் கல்வி முறை முடங்கிக் கிடக்கிறது.
அரவிந்த் கெஜ்ரிவால் அரசு உருவாக்கிய கல்வி முறையை அழிக்க பா.ஜ., முடிவு செய்துள்ளது.
அரசுப் பள்ளிகளின் ஆசிரியர்களை இரவோடு இரவாக இடமாற்றம் செய்ததே அதற்கு மிகப்பெரிய உதாரணம்.
ஒரு பள்ளியில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரியும் ஆசிரியர்களை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துஉள்ளனர்.
ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு ஒரு திருப்பத்தை கண்ட டில்லியின் கல்வி முறைக்கு அரசு பள்ளிகளின் ஆசிரியர்கள் முதுகெலும்பாக திகழ்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.