ரியல் எஸ்டேட் நிறுவனம் போல் செயல்படும் பா.ஜ.,: அகிலேஷ் கடும் தாக்கு
ரியல் எஸ்டேட் நிறுவனம் போல் செயல்படும் பா.ஜ.,: அகிலேஷ் கடும் தாக்கு
ADDED : ஆக 08, 2024 12:48 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: 'பா.ஜ., ரியல் எஸ்டேட் நிறுவனம் போல் செயல்படுகிறது' என சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
அவர் சமூக வலை தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், '' பா.ஜ., உறுப்பினர்களின் நலனுக்காக நிலத்தை விற்க மசோதாவை திருத்த முயற்சி நடக்கிறது. பா.ஜ., ரியல் எஸ்டேட் நிறுவனம் போல் செயல்படுகிறது. வக்பு சட்டம் 1955ன் விதிகளை திருத்த முற்படும் மசோதா வெறும் ஒரு சாக்கு தான்.
வக்பு வாரியநிலங்கள் !
ரயில்வே சொந்தமான நிலங்களை விற்பதே பா.ஜ.,வின் ஒரே இலக்கு. பா.ஜ., தன்னை பாரதிய ஜமீன் கட்சி என்று பெயர் மாற்றிக் கொள்ள வேண்டும். வக்பு வாரிய நிலங்கள் விற்கப்படமாட்டாது என எழுத்துப்பூர்வமாக உத்தரவாதம் அளிக்க வேண்டும். '' எனக் கூறியுள்ளார்.