sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பா.ஜ., - எம்.எல்.ஏ., முனிரத்னாவை போலீஸ் அள்ளியது! ஆந்திரா தப்ப முயன்றபோது சுற்றிவளைப்பு

/

பா.ஜ., - எம்.எல்.ஏ., முனிரத்னாவை போலீஸ் அள்ளியது! ஆந்திரா தப்ப முயன்றபோது சுற்றிவளைப்பு

பா.ஜ., - எம்.எல்.ஏ., முனிரத்னாவை போலீஸ் அள்ளியது! ஆந்திரா தப்ப முயன்றபோது சுற்றிவளைப்பு

பா.ஜ., - எம்.எல்.ஏ., முனிரத்னாவை போலீஸ் அள்ளியது! ஆந்திரா தப்ப முயன்றபோது சுற்றிவளைப்பு


ADDED : செப் 14, 2024 11:44 PM

Google News

ADDED : செப் 14, 2024 11:44 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு : ஜாதி பெயரை குறிப்பிட்டு தகாத வார்த்தைகளால் ஒப்பந்ததாரரை மிரட்டியதாக, ராஜராஜேஸ்வரிநகர் பா.ஜ., - எம்.எல்.ஏ., முனிரத்னா மீது, பெங்களூரு வயாலி காவல் போலீசில் இரண்டு வழக்குகள் பதிவாகின. அவற்றின் அடிப்படையில், கோலார் பண்ணை வீட்டில் இருந்து ஆந்திராவுக்கு தப்பிச் செல்ல முயன்றபோது, அவரை நேற்று போலீசார் கைது செய்தனர்.

பெங்களூரு மாநகராட்சி பணிகளை எடுத்துச் செய்யும் ஒப்பந்ததாரர் சலுவராஜு, 44. இவருக்கு, குப்பை மேலாண்மை ஒப்பந்தம் வழங்குவதற்காக, 30 லட்சம் ரூபாய் கமிஷன் வழங்கும்படி, பெங்களூரு ராஜராஜேஸ்வரிநகர் பா.ஜ., - எம்.எல்.ஏ., முனிரத்னா, 60, கோரியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பாக, முனிரத்னாவுடன் உரையாடிய ஆடியோவை, ஒப்பந்ததாரர் வெளியிட்டார். அதில், 'சொன்னபடி பணத்தை கொண்டு வந்து கொடுத்து விடு. உன் மனைவியை வேறொருவருடன் படுக்க வைக்கிறாய். நீ ஒக்கலிகா தானே, என்னிடம் படுக்க வை' என, பல கெட்ட வார்த்தைகளை முனிரத்னா பேசியுள்ளார்.

மேலும், முன்னாள் காங்கிரஸ் கவுன்சிலர் வேலு நாயக்கரின் ஜாதியை குறிப்பிட்டும் தவறாக முனிரத்னா பேசியுள்ளார்.

இது தொடர்பாக முனிரத்னா மீது, ஒப்பந்ததாரர் சலுவராஜு, வேலு நாயக்கர் ஆகிய இருவரும், வயாலிகாவல் போலீஸ் நிலையத்தில் நேற்று புகார் அளித்தனர். அவற்றின் அடிப்படையில், முனிரத்னா மீது, லஞ்சம் மற்றும் ஜாதியை தவறாக குறிப்பிட்டது தொடர்பாக இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இதில், ஜாதியை தவறாக குறிப்பிட்ட வழக்கில், ஜாமின் வழங்க முடியாத சட்டப்பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையில், போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி, புகார்தாரர்கள் இருவரும், முதல்வர் சித்தராமையாவை நேற்று மாலை சந்தித்து தகவல் தெரிவித்தனர். அப்போது, நடவடிக்கை எடுப்பதற்கு உத்தரவிடும்படி, ஆவணங்களுடன் முதல்வரிடம் மனு கொடுத்தனர்.

மேலும், வயாலிகாவலில் உள்ள வீட்டில் தான், ஒப்பந்ததாரரை, எம்.எல்.ஏ., மிரட்டியதாக சொல்லப்பட்டதால், போலீசார் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது, முனிரத்னா வீட்டில் இல்லை. அவர் தலைமறைவாகிவிட்டதாக கூறப்பட்டது.

அவரது மொபைல் நெட்வொர்க்கை பயன்படுத்தி, எங்கு உள்ளார் என்பது குறித்து போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர். கோலார் மார்க்கமாக ஆந்திராவை நோக்கிச் சென்று கொண்டிருப்பது கண்டறியப்பட்டது.

இதுகுறித்து கோலார் போலீசாருக்கு, வயாலிகாவல் போலீசார் தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து, கோலாரின் முல்பாகல் தாலுகா, நங்கிலி கிராமத்தில், ஒரு பண்ணை வீட்டில் முனிரத்னா இருப்பது உறுதி செய்யப்பட்டது.

அங்கிருந்து, ஆந்திராவின் சித்துாருக்கு தப்பிச்செல்ல முற்பட்டபோது, போலீசார் சுற்றி வளைத்து நேற்று மாலை முனிரத்னாவை கைது செய்தனர்.

அவரை, போலீஸ் ஜீப்பில் ஏற்றி, பெங்களூரு வந்தனர். இதன் பின், வயாலிகாவல் போலீசாரிடம், கோலார் போலீசார் ஒப்படைத்தனர்.

பா.ஜ., - எம்.எல்.ஏ., முனிரத்னாவை கைது செய்துள்ள சம்பவம், கர்நாடக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பா.ஜ., - எம்.எல்.ஏ., முனிரத்னா கைதை கண்டித்து பா.ஜ., தொண்டர்கள் வயாலி காவல் போலீஸ் நிலையம் முன் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

ஜாதி பெயரை குறிப்பிட்டும், பெண்களை அவமானப்படுத்திய முனிரத்னாவை கட்சியில் இருந்து பா.ஜ., நீக்க வேண்டும். அவரை எம்.எல்.ஏ., பதவியில் இருந்து, சபாநாயகர் தகுதி நீக்கம் செய்ய வேண்டும். இத்தகைய தலைவர்கள் இருப்பதால், மாநிலத்தில் விரைவில் ஜாதிகளிடையே சண்டை அதிகமாகும்.

- சுரேஷ்

முன்னாள் எம்.பி., காங்கிரஸ்

முனிரத்னா என்னிடம் 30 லட்சம் ரூபாய் கமிஷன் கேட்டிருந்தார். 20 லட்சம் ரூபாய் ஏற்கனவே பெற்றுக் கொண்டார். இன்னும் 10 லட்சம் ரூபாய் தரவில்லை என்று என்னை தவறாக திட்டினார். என்னிடம் அவர் பேசிய ஏழு ஆடியோக்கள் உள்ளன.

- சலுவராஜு ஒப்பந்ததாரர்

ஆடியோவில் இருப்பது முனிரத்னாவின் குரல் தான். இட்லி பொட்டலம் கட்டிக் கொண்டிருந்தவர், ஆயிரக்கணக்கான கோடிக்கு சொந்தக்காரர் ஆனது எப்படி? அவரை கைது செய்திருப்பது, சத்தியத்துக்கு கிடைத்த வெற்றி. சத்திய ஹரிசந்திரன் போன்று அவர் பேசுகிறார்.

- வேலு நாயக்கர் முன்னாள் கவுன்சிலர், காங்கிரஸ்

முனிரத்னாவை நீக்குங்கள்!

பா.ஜ.,வுக்கு முதல்வர் 'அட்வைஸ்'முதல்வர் சித்தராமையாவின் 'எக்ஸ்' வலைதள பதிவு:வாய் திறந்தால், கலாசாரம், பாரம்பரியம் குறித்து பேசும் பா.ஜ., தலைவர்களே, முதலில் துர்நாற்றம் வீசும் உங்கள் எம்.எல்.ஏ., முனிரத்னா வாயை சுத்தம் செய்யுங்கள். அதன் பின், ஊருக்கு புத்தி சொல்லுங்கள்.ஹிந்துக்கள் அனைவரும் ஒன்றே என்று கூறும் பா.ஜ.,வினரின் கோஷம் வெறும் தேர்தலுக்கு மட்டுமே பொருந்தும். பா.ஜ., தலைவர்கள் மனதில் விரோதம், பொறாமை, பொறுமையின்மை மட்டுமே உள்ளன. இதற்கு, முனிரத்னா வாயில் இருந்து வந்த சொற்களே சாட்சி.தலித், ஒக்கலிகர் குறித்து தவறாக பேசியுள்ளார். மிகவும் ஆபாசமாகவும், மனதிற்கு தோன்றியதை எல்லாம் பேசியுள்ளார். பணம் கொடுக்கவில்லை என்றால் கொலை செய்து விடுவேன் என்றும் மிரட்டல் விடுத்துள்ளார்.பா.ஜ.,வினரின் 40 சதவீதம் கமிஷன் அரசு தொலைந்தாலும், அதனால் பயனடைந்தவர்கள் அப்படியே உள்ளனர். இப்போது, துாய்மைப்படுத்தும் பணியில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம். சட்டம் - ஒழுங்கு சரியில்லை என்று கூறும் பா.ஜ., தலைவர்கள் விஜயேந்திரா, அசோக் ஆகியோர், அந்த கட்சி எம்.எல்.ஏ., முனிரத்னா மீது நடவடிக்கை எடுப்பதற்கு தைரியம் இருக்கிறதா?இப்போது பா.ஜ.,வினருக்கு இருப்பது இரண்டு வழிகள் மட்டுமே. ஒன்று, முனிரத்னா கூறியது போல், தலித் விரோதிகள் என்று ஒப்புக் கொள்ள வேண்டும். இல்லை என்றால், தலித் சமுதாயத்தினரிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டு, முனிரத்னாவை கட்சியில் இருந்து நீக்க வேண்டும்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.



பா.ஜ., ஒழுங்கு 'நோட்டீஸ்'

பா.ஜ., ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் லிங்கராஜ் பாட்டீல், 'டிவி' சேனல்களில் வெளியான செய்தியில், 'தாங்கள் தகாத முறையில் பேசியுள்ளதாக ஒளிபரப்பப்படுகிறது. இதுகுறித்து, உங்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இத்தகைய செயல், கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தியுள்ளது. இந்த விஷயம் தொடர்பாக, ஐந்து நாட்களுக்குள் விளக்கம் அளிக்கும்படி 'நோட்டீஸ்' வழங்கப்படுகிறது' என முனிரத்னாவுக்கு 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டுள்ளது.



குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை

கைது செய்யப்படுவதற்கு முன், தொலைபேசி மூலம், ஒரு 'டிவி' சேனலில் முனிரத்னா பேசியதாவது:நான் அவரது போனில் தவறாக பேசி இருந்ததால், சபாநாயகரிடம் வழங்கட்டும். அரைமணி நேரத்தில் நான் நேரில் வந்து ராஜினாமா செய்வேன். சட்டப்போராட்டம் நடத்துவேன்.ஒரு ரூபாய் கூட ஒப்பந்ததாரரிடம் பெறவில்லை. ஏழு ஆண்டுகளாக ஆர்.ஆர்., நகரில் அவர் பணிகள் செய்து வருகிறார். அந்த ஆடியோவில் உள்ளது, நான் பேசியது கிடையாது.என் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை. சட்டசபை தேர்தல், லோக்சபா தேர்தலில் தோல்வி அடைந்தவர்கள், என் மீது அரசியல் ரீதியாக குற்றஞ்சாட்டுகின்றனர்.பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷா குறித்து தொழில்நுட்பம் பயன்படுத்தி திருத்தம் செய்கின்றனர். நான் 20 லட்சம் ரூபாய் வாங்கவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.








      Dinamalar
      Follow us