காங்., அமைச்சர் பைரதி சுரேஷுக்கு சம்பந்தியாகும் பா.ஜ., - எம்.எல்.ஏ.,
காங்., அமைச்சர் பைரதி சுரேஷுக்கு சம்பந்தியாகும் பா.ஜ., - எம்.எல்.ஏ.,
ADDED : ஜூன் 28, 2024 11:15 PM

பெங்களூரு: காங்கிரஸ் அமைச்சரின் மகனுக்கும், பா.ஜ., -- எம்.எல்.ஏ., மகளுக்கும் திருமணம் நடக்க உள்ளது. அரசியல் ரீதியில் எதிரெதிர் கட்சிகளின் தலைவர்கள், சம்பந்தி ஆகின்றனர்.
காங்கிரஸ் மூத்த தலைவரும், நகர வளர்ச்சி துறை அமைச்சருமான பைரதி சுரேஷின் மகன் சஞ்சய். பெங்களூரின் எலஹங்கா தொகுதி பா.ஜ., - எம்.எல்.ஏ., விஸ்வநாத்தின் மகள் அபூர்வா. இருவரும் மல்லேஸ்வரத்தில் உள்ள வித்யா மந்திரில் படித்தனர்.
கல்லுாரி நாட்களில் இவர்களுக்குள் அறிமுகம் ஏற்பட்டது. நல்ல நண்பர்களாக இருந்தனர்.
நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் பரஸ்பரம் காதலித்தனர். இவர்களின் திருமணத்துக்கு இரண்டு குடும்பத்தினரும் சம்மதித்துள்ளனர். தற்போது திருமண பேச்சு நடக்கிறது. விரைவில் திருமணம் நடக்கலாம்.
சஞ்சய், அபூர்வா செல்வாக்கான அரசியல்வாதிகள் குடும்பத்தை சேர்ந்தவர்கள். எனவே இவர்களின் திருமணம், ஆடம்பரமாக நடக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
அரசியல் ரீதியில் எதிரிகளான இவர்கள், தற்போது சம்பந்திகளாகின்றனர்.