ADDED : மே 30, 2024 09:29 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நகரில் நிலவும் குடிநீர் பிரச்னையை தீர்க்காத மாநில நீர்வளத் துறை அமைச்சர் ஆதிஷியை கண்டித்து, அவரது வீட்டை முற்றுகையிடப் போவதாக பா.ஜ., மகளிர் அணியினர் அறிவித்திருந்தனர்.
அதன்படி, நேற்று காலை பா.ஜ., மகளிர் அணியினர், அமைச்சர் ஆதிஷி இல்லம் அருகே குவிந்தனர். மண் பானைகளை தோளில் ஏந்தியவாறும் ஆம் ஆத்மிக்கு எதிரான பதாகைகளை ஏந்தியவாறும் போராட்டத்தில் மகளிர் அணியினர் கலந்து கொண்டனர்.
அவர்களை தடுப்பு வேலிகளை அமைத்து, போலீசார் தடுத்து நிறுத்தினர். அங்கே முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராகவும், அமைச்சர் ஆதிஷிக்கு எதிராகவும் மகளிரணியினர் கோஷங்களை எழுப்பினர்.