sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

சந்தேஷ்காலி விவகாரத்தில் திடீர் திருப்பம் பா.ஜ., பொய் புகார் கூறியதாக பெண் 'பல்டி'

/

சந்தேஷ்காலி விவகாரத்தில் திடீர் திருப்பம் பா.ஜ., பொய் புகார் கூறியதாக பெண் 'பல்டி'

சந்தேஷ்காலி விவகாரத்தில் திடீர் திருப்பம் பா.ஜ., பொய் புகார் கூறியதாக பெண் 'பல்டி'

சந்தேஷ்காலி விவகாரத்தில் திடீர் திருப்பம் பா.ஜ., பொய் புகார் கூறியதாக பெண் 'பல்டி'


ADDED : மே 10, 2024 01:27 AM

Google News

ADDED : மே 10, 2024 01:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோல்கட்டா, சந்தேஷ்காலி விவகாரத்தில், பா.ஜ.,வைச் சேர்ந்தவர்கள் வெற்றுத்தாளில் கையெழுத்து வாங்கி, பொய்யாக பாலியல் குற்றச்சாட்டை இட்டுக்கட்டியதாக, புகார் தெரிவித்த பெண்களில் ஒருவர், 'பல்டி' அடித்துள்ளார். இது மேற்கு வங்க அரசியலில் அனலை கிளப்பியுள்ளது.

பாலியல் பலாத்காரம்

மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்குள்ள சந்தேஷ்காலி பகுதியைச் சேர்ந்த திரிணமுல் காங்., பிரமுகர் ஷாஜஹான் ஷேக், தங்களை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், விவசாய நிலங்களை அபகரித்ததாகவும் பழங்குடியின பெண்கள் போலீசில் புகார் அளித்தனர்.

தலைமறைவாக இருந்த ஷாஜஹான் கைது செய்யப்பட்டார். இந்த விவகாரம் ஆளும் திரிணமுல் காங்., அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது. லோக்சபா தேர்தலில் இந்த விவகாரம் விவாதப் பொருளாக உள்ளது.

இந்நிலையில், புகார் தெரிவித்த பெண்களில் ஒருவர் திடீர் பல்டி அடித்துள்ளார். உண்மையில் அவர்கள், 100 நாள் வேலை திட்டத்துக்கான பணம் வழங்கப்படாதது தொடர்பாக புகார் தெரிவித்ததாகவும், பா.ஜ.,வைச் சேர்ந்தவர்கள் பிரச்னையை தீர்த்து வைப்பதாக கூறி வெற்றுத்தாளில் கையெழுத்து வாங்கியதாகவும் தெரிவித்தார்.

அந்த தாளில், பாலியல் பலாத்காரம், நில அபகரிப்பு போன்ற பொய்யான புகார்களை தங்கள் இஷ்டம் போல நிரப்பிக் கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், முன்னர் அளித்த புகாரை திரும்ப பெற்றதுடன், உண்மையை பேசியதற்காக தான் மிரட்டப்படுவதாகவும், புறக்கணிக்கப்படுவதாகவும் சந்தேஷ்காலி போலீஸ் ஸ்டேஷனில் புதிய புகாரை அளித்துள்ளார்.

மோதல்

இது, திரிணமுல் காங்கிரஸ் கட்சிக்கு புது தெம்பை அளித்துள்ளது. ஏற்கனவே இந்த விவகாரத்தில் மோதிக் கொண்டிருக்கும் திரிணமுல் - பா.ஜ., தலைவர்கள் இடையே தற்போது மோதல் வலுத்துள்ளது.

அந்த பெண்ணின் வாக்குமூலத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள திரிணமுல் காங்., முடிவு செய்துள்ளது.

முன்னதாக, சந்தேஷ்காலி பாலியல் பலாத்கார புகார் இட்டுக்கட்டப்பட்ட கதை என்பதை பா.ஜ., பிரமுகர் சுவேந்து அதிகாரி உள்ளிட்டோர் கேமரா முன் வெளிப்படையாக தெரிவித்ததை தேர்தல் கமிஷனில் புகாராக அளிக்க உள்ளதாக திரிணமுல் காங்., தெரிவித்துள்ளது.

இந்த விவகாரத்தில் திரிணமுல் காங்.,குக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியும் களம் இறங்கியுள்ளது.

இதற்கிடையே, திரிணமுல் காங்கிரஸ் ஆட்சியில் இருப்பதால், இந்த பெண்களை மிரட்டி புகாரை வாபஸ் பெற வைத்ததாக மேற்கு வங்க மாநில பா.ஜ.,வினர் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us