ADDED : பிப் 10, 2025 05:45 AM

தாவணகெரே: ''கர்நாடக பா.ஜ., தற்போது ஐ.சி.யு.,வில் உள்ளது. இனியும் மேலிடம் மவுனமாக இருந்தால், கோமாவுக்கு சென்றுவிடும்,'' என பா.ஜ., முன்னாள் எம்.எல்.ஏ., ராஜு கவுடா தெரிவித்தார்.
தாவணகெரேவில் நேற்று அளித்த பேட்டி:
பா.ஜ.,வில் உட்பூசல் அதிகரிக்கிறது. தற்போது கர்நாடக பா.ஜ., - ஐ.சி.யு.,வில் உள்ளது. மாநில தலைவர்களின் கையில் எதுவும் இல்லை. மேலிடம் தான் கவனித்து சரி செய்ய வேண்டும். மவுனமாக இருந்தால், கட்சி கோமாவுக்கு சென்று விடும். இதன்பின் என்ன ஆகும் என்பது, அனைவருக்கும் தெரியும்.
பலரும் கோஷ்டி அமைத்து கொண்டு, சுற்றி வருகின்றனர். எங்கள் கட்சியில் உட்பூசல் இல்லை என, நான் கூறினால் என்னை பைத்தியம் என, கூறுவர். பா.ஜ.,வில் கோஷ்டி பூசல் உள்ளது. இதை சரி செய்ய மேலிடத்தை தவிர, வேறு யாராலும் முடியாது.
விஜயேந்திராவோ, பசனகவுடா பாட்டீல் எத்னாலோ, பதவியில் இருக்க மேலிடம் சம்மதிக்க வேண்டும். இல்லையென்றால் அவரவர் வழியை, அவர்கள் பார்த்து கொள்ளட்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

