ஆந்திராவில் மருந்து ஆலையில் வெடி விபத்து: 17 பேர் பலி
ஆந்திராவில் மருந்து ஆலையில் வெடி விபத்து: 17 பேர் பலி
ADDED : ஆக 21, 2024 10:55 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அமராவதி: ஆந்திராவில் மருந்து தயாரிப்பு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 17 பேர் பலியாயினர்.
ஆந்திராவின் அனக்காபள்ளி மாவட்டம் அச்சுதபுரம் சிறப்பு பொருளாதார மண்டல வளாகத்தில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான மருந்து தயாரிப்பு தொழிற்சாலை உள்ளது .இங்கு 400-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இங்கு திடீரென பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 17 பேர் பலியாகினர். 45-க்கும் மேற்பட்டேர் காயமடைந்தனர். காயமடைந்தவர் அருகே என்.டி.ஆர்., மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தகவலறிந்த தீயணைப்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்ட கலெக்டர் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தார்.
நாளை முதல்வர் சந்திரபாபு நாயுடு வெடிவிபத்த நிகழ்ந்தஇடத்தை பார்வையிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

