தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ சாலையில் வழிமறிக்கும் வாகனங்கள்

சாலையில் வழிமறிக்கும் வாகனங்கள்

சாலையில் வழிமறிக்கும் வாகனங்கள்


ADDED : மே 14, 2024 04:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 14, 2024 04:31 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தங்கவயல்: பாரண்டஹள்ளி -பொட்டேப்பள்ளி சாலையில்வாகனங்கள்செல்ல வழிவிடாமல், பாரண்ட ஹள்ளி கிராமத்தினர் தகராறு செய்வதாககிராம பஞ்சாயத்து வளர்ச்சித் திட்ட அதிகாரியிடம் பொட்டேப்பள்ளி கிராமஇளைஞர்சங்கத்தினர் புகார் செய்தனர்.

இதுகுறித்து அதன் தலைவர் அமீர் கூறியதாவது:

பாரண்டஹள்ளியில் இருந்து பொட்டேப்பள்ளி சாலை வழியாக தான் கம்பம்பள்ளி, டைமண்ட் பள்ளி, பீரனகுப்பா,செலிகான ஹள்ளி, நாச்சாண்ட ஹள்ளி ஆகிய இடங்களுக்குச்செல்ல முடியும்.

ஆனால் பாராண்ட ஹள்ளியில் வசிக்கிறவர்கள், தங்களின் வீட்டின் முன் ஆட்டோக்கள், இருசக்கர வாகனங்கள் நிறுத்துவதால்,பிற வாகனங்கள் அவ்வழியே செல்லமுடிவதில்லை. டிராக்டர்கள், லாரிகள்,கார்கள் செல்ல வழியே இல்லை. இவற்றை அப்புறப்படுத்தினால் மட்டுமே வழி கிடைக்கும். இதன் பேரில் உரிய நடவடிக்கை எடுக்க கோரினோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்காக கிராம பஞ்சாயத்துத் திட்ட அதிகாரி கிருஷ்ணப்பா, புகார் அளித்த நபர்களுடன் சம்பவ இடத்திற்குச் சென்றார். இரு தரப்பினரையும் அழைத்துப் பேசினார்.

'பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில், சாலையில் வாகனங்களை நிறுத்துவதை தவிர்க்க வேண்டும்' என, கிராம பஞ்சாயத்து அதிகாரிஅறிவுறுத்தினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us