ADDED : ஏப் 21, 2024 06:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெங்களூரு: பி.எம்.டி.சி., வெளியிட்ட அறிக்கை:
மார்ச் மாதம் 17,900 டிரிப்புகளில், பி.எம்.டி.சி., பஸ்களில் சோதனை நடத்தப்பட்டது. டிக்கெட் பெறாமல் பயணித்த 3,840 பேர் கண்டுபிடிக்கப்பட்டனர். இவர்களிடம் 7,65,090 ரூபாய், அபராதம் வசூலிக்கப்பட்டது. கடமை தவறியதாக 1,101 நடத்துனர்கள் மீது, பி.எம்.டி.சி., வழக்கு பதிவு செய்துள்ளது.
மகளிர் பயணியருக்காக ஒதுக்கப்பட்ட இருக்கைகளில், அமர்ந்து பயணித்த 530 ஆண் பயணியரிடம் 53,000 அபராதம் வசூலிக்கப்பட்டது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

