மே.வங்கத்தில் ராமநவமி ஊர்வலத்தில் குண்டு வெடிப்பு: ஒருவர் காயம்
மே.வங்கத்தில் ராமநவமி ஊர்வலத்தில் குண்டு வெடிப்பு: ஒருவர் காயம்
ADDED : ஏப் 18, 2024 10:41 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோல்கட்டா: மேற்கு வங்க மாநிலத்தில் ராம நவமியை முன்னிட்டு நடந்த ஊர்வலத்தில், குண்டு வெடித்து, ஒரு பெண் படுகாயமடைந்தார்.
மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள முர்ஷிதாபாத் மாவட்டத்தில் ராமநவமியை முன்னிட்டு, நேற்று (ஏப்ரல் 17) ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்தில் திடீரென குண்டு வெடித்தது. ஒரு பெண் பலத்த காயமுற்றார்.
அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

