ஜார்க்கண்டில் குண்டுவெடிப்பு: சி.ஆர்.பி.எப்., வீரர்கள் காயம்
ஜார்க்கண்டில் குண்டுவெடிப்பு: சி.ஆர்.பி.எப்., வீரர்கள் காயம்
ADDED : மார் 05, 2025 06:53 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராஞ்சி: ஜார்க்கண்டில் நடந்த குண்டுவெடிப்பில் சி.ஆர்.பி.எப்., வீரர்கள் 3 பேர் காயமடைந்தனர்.
ஜார்க்கண்ட் மாநிலம் மேற்கு சிங்பும் மாவட்டத்தில் உள்ள பாலிவாவில், வழக்கமான ரோந்து பணியின் போது நடந்தது. காயமடைந்த வீரர்கள் விரைவாக ராஞ்சிக்கு விமானம் மூலம் எடுத்துச் செல்லப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டனர்.
மனோகர்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சரண்டா காடுகளில் உள்ள பாலிவாவில் சி.ஆர்.பி.எப்., 197 பட்டாலியன் பணியாளர்கள் தேடுதல் நடவடிக்கைக்காக அங்கு சென்றபோது இந்த சம்பவம் நடந்ததாக கோல்ஹான் டி.ஐ.ஜி., தெரிவித்துள்ளார்.