விமான நிலையம், மருத்துவமனைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
விமான நிலையம், மருத்துவமனைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
ADDED : மே 12, 2024 09:05 PM

டில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் மற்றும் இரண்டு மருத்துவமனைகளுக்கு மர்மநபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
இந்திரா காந்தி சர்வதேச (ஐஜிஐ) விமான நிலையம், டில்லியில் உள்ள எட்டு மருத்துவமனைகளுக்கு ஞாயிற்றுக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் வந்ததாக தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
மாலை 6.20 மணியளவில் தொலைபேசி அழைப்பு வந்ததையடுத்து, விமான நிலையத்தின் டெர்மினல் 3ல் போலீஸ் மற்றும் வெடிகுண்டு செயலிழக்கும் படைகள் நிறுத்தப்பட்டன. சந்தேகத்திற்கிடமான எதுவும் இதுவரை கிடைக்கவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இன்று மதியம் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்த புராரி மருத்துவமனை மற்றும் சஞ்சய் காந்தி மருத்துவமனை உள்ளிட்ட நகர மருத்துவமனைகளிலும் குழுக்கள் நிறுத்தப்பட்டன.
“வடக்கு டில்லியின் புராரியில் உள்ள மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல் கடிதம் வந்தது. வெடிகுண்டு செயலிழப்பு குழுவினர் சம்பவ இடத்தில் உள்ளனர். சந்தேகத்திற்கிடமான வகையில் எதுவும் கிடைக்கவில்லை” என்று டிசிபி (வடக்கு) மனோஜ் மீனா கூறினார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்,'' என்றார்.