நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சீனாவுடன் பேச்சு
ரஷ்யாவில் நடந்த, 'பிரிக்ஸ்' கூட்டத்துக்கு இடையே, சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீயை, அஜித் தோவல் நேற்று சந்தித்து பேசினார். அப்போது கிழக்கு லடாக் எல்லையில் நிறுத்தப்பட்டுள்ள இரு நாட்டு படைகளை முழுமையாக விலக்கிக் கொள்வதில் உடனடியாக கவனம் செலுத்த முடிவு செய்யப்பட்டது. எல்லையில் அமைதியை ஏற்படுத்தி இருதரப்பு உறவுகளை மீண்டும் புதுப்பிக்க இந்த நடவடிக்கை அவசியம் என இருவரும் வலியுறுத்தினர்.