ADDED : பிப் 21, 2025 09:56 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: மதுபனியில் எக்ஸ்பிரஸ் ரயிலின் ஜன்னல் கண்ணாடிகளை சேதப்படுத்தியதற்காக ஒரு சிறுவனை ரயில்வே பாதுகாப்புப் படை கைது செய்துள்ளது.
கடந்த 10ம் தேதி பீகார் மாநிலம் மதுபனியில் சுதந்திராதா சேனானி எக்ஸ்பிரஸின் குளிர்சாதன பெட்டிகளின் ஜன்னல் கண்ணாடிகளை சிலர் சேதப்படுத்தினர்.
இதுகுறித்து ரயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து, குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக ஒரு சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே போலீசார் தெரிவித்தனர்.
சம்பவ தினத்தன்று மதுபனியில் ரயில்வே போலீசார் இல்லாததை தங்களுக்கு சாதகமாக அந்த கும்பல் பயன்படுத்தி, ரயில் பெட்டிகளுக்கு சேதம் விளைவித்ததாக ரயில்வே போலீசார் தெரிவித்தனர்.
கட்டுக்கடங்காத கூட்டத்தில், வன்முறை சம்பவங்களை சிலர் கட்டவிழ்த்து விட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

