ADDED : மே 09, 2024 05:29 AM
மங்களூரு : தனியார் மருத்துவமனையின் பெண்கள் கழிப்பறையில், செல்போன் பொருத்தி ஆபாச படம் எடுக்க முயன்ற, சிறுவன் கைது செய்யப்பட்டான்.
மங்களூரு பந்தர் பகுதியில், தனியார் மருத்துவமனை உள்ளது. நேற்று முன்தினம் 17 வயது சிறுவன், சிகிச்சைக்காக வந்தான். சிகிச்சை முடிந்ததும், பெண்கள் கழிப்பறைக்குள் புகுந்த சிறுவன், ஜன்னலுக்குள் மொபைல் போனை வைத்து, வீடியோவை ஆன் செய்துவிட்டு, வெளியே வந்துவிட்டான். சிறிது நேரத்தில் கழிப்பறையை சுத்தம் செய்யும் பெண், அங்கு வந்தார்.
ஜன்னலுக்குள் வைக்கப்பட்டிருந்த மொபைல் போன் ஒலித்தது. போன் ஒலிக்கும் சத்தம் கேட்டு, அந்த சிறுவன் அங்கு வந்தான். அவனை கையும் களவுமாக பிடித்து, மருத்துவமனை நிர்வாகத்திடம் பெண் ஒப்படைத்தார்.
அதன்பின்னர் அந்த சிறுவன், பந்தர் போலீசிடம் ஒப்படைக்கப்பட்டான். விசாரணையில் கழிப்பறையில் மொபைல் போனை வைத்து, பெண்களை ஆபாச படம் எடுக்க முயன்றதை ஒப்புக் கொண்டான். பின் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டான்.