ADDED : மார் 25, 2024 06:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தங்கவயல்: ராபர்ட்சன் பேட்டை, கீதா சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ பிரசன்ன லட்சுமி வெங்கட ரமண சுவாமி கோவிலில் இன்று 'ரத உற்சவம் நடக்கிறது.
பிரசன்ன லட்சுமி வெங்கட ரமண சுவாமி கோவிலில், 89ம் ஆண்டு பிரம்மோற்சவம் இம்மாதம் 19ம் தேதி துவங்கியது. ஏழாவது நாளான இன்று, ஹிந்து அறநிலையத் துறை சார்பில்ரத உற்சவம் நடக்கிறது.
பிரம்மோற்சவத்தில் தினமும் இரவு 10:00 மணிக்கு மேல் தான் உற்சவ மூர்த்தி நகர் வலம் கொண்டு வரப்படுகிறது. ஆனால், பிரம்ம ரத உற்சவம் மட்டுமே இன்று காலை 6:50 மணிக்கு கோவிலில் இருந்து புறப்படுகிறது. இரவு 8:00 மணிக்கு கோவிலை வந்தடைகிறது.
பகலில் சுவாமி நகர் வலம் நடக்கும் ஒரே உற்சவம் இந்த ரத உற்சவம் ஆகும். இவ்விழாவில் பல்வேறு நகரங்கள், கிராமங் களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்கின்றனர்.

