ADDED : மார் 15, 2025 04:41 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தங்கவயல்: தங்கவயல் பிரசன்ன லட்சுமி வெங்கடரமண சுவாமி கோவிலில் பிரம்மோத்சவம் இம்மாதம் 8ம் தேதி துவங்கியது. 20ம் தேதி நிறைவடைகிறது.
தினமும் சுவாமி உத்சவம் இரவு 10:30 மணிக்கு மேல் நடத்தப்படுகிறது. நேற்று காலையில் யாக பூஜைகள், அபிஷேகம், சிறப்பு மலர் அலங்காரம் நடந்தது.
அதன் பின், வேத மந்திரங்கள் ஓதி, மங்கள இசை, பக்தி பஜனைகளுடன் 'கோவிந்தா' கோஷத்துடன் சுவாமி ரதோத்சவம் நடந்தது.
நகரின் முக்கிய இடங்களில் பக்த குழுவினர் பானகம், மோர், குடிநீர், பால், பிரசாதம் வழங்கினர். ரதத்தின் மீது பக்தர்கள் தவனம், துளசி மற்றும் பலவகையான பூக்களை வீசியும் பூஜைகள் செய்தனர். பலரும் நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். இரவு 9:00 மணிக்கு மீண்டும் கோவிலை அடைந்தது.