sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஆபாச வழக்கில் சிக்கிய பிரஜ்வல் 'சஸ்பெண்ட்' ம.ஜ.த., மாநில தலைவர் குமாரசாமி அதிரடி

/

ஆபாச வழக்கில் சிக்கிய பிரஜ்வல் 'சஸ்பெண்ட்' ம.ஜ.த., மாநில தலைவர் குமாரசாமி அதிரடி

ஆபாச வழக்கில் சிக்கிய பிரஜ்வல் 'சஸ்பெண்ட்' ம.ஜ.த., மாநில தலைவர் குமாரசாமி அதிரடி

ஆபாச வழக்கில் சிக்கிய பிரஜ்வல் 'சஸ்பெண்ட்' ம.ஜ.த., மாநில தலைவர் குமாரசாமி அதிரடி

1


ADDED : மே 01, 2024 02:34 AM

Google News

ADDED : மே 01, 2024 02:34 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஹூப்பள்ளி, ஆபாச வீடியோ வழக்கில் சிக்கிய, கர்நாடகாவின் ம.ஜ.த., - எம்.பி., பிரஜ்வல் ரேவண்ணா கட்சியில் இருந்து, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டு உள்ளார். ம.ஜ.த., உயர்மட்ட குழு கூட்டத்தில், கட்சியின் மாநில தலைவர் குமாரசாமி இந்த அதிரடி முடிவை அறிவித்தார்.

கர்நாடக மாநிலம், ஹாசன் ம.ஜ.த., - எம்.பி., பிரஜ்வல் ரேவண்ணா, 33. முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் ஆவார். சில பெண்களுடன் பிரஜ்வல் நெருக்கமாக இருப்பதாக கூறப்படும், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின. இது குறித்து விசாரிக்க, சிறப்பு விசாரணை குழுவை கர்நாடக அரசு நியமித்துள்ளது. இதற்கிடையில் பிரஜ்வல் ரேவண்ணா, ஜெர்மனி சென்று விட்டார்.

'பிரஜ்வலை கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்ய வேண்டும்' என்று, ம.ஜ.த., - எம்.எல்.ஏ.,க்கள் சரணகவுடா கந்தகூர், சம்ருத்தி மஞ்சுநாத் வலியுறுத்தி இருந்தனர்.

இந்நிலையில், ஹூப்பள்ளியில் நேற்று நடந்த ம.ஜ.த., உயர்மட்ட குழு கூட்டத்தில், பிரஜ்வலை கட்சியில் இருந்து 'சஸ்பெண்ட்' செய்வதாக கட்சியின் மாநில தலைவரும், பிரஜ்வலின் சித்தப்பாவுமான குமாரசாமி அறிவித்தார்.

பின்னர் அவர் அளித்த பேட்டி:

ஆபாச வீடியோ வழக்கில் சிக்கியதால், பிரஜ்வலை கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்து உள்ளோம். இதற்கான உத்தரவில் கட்சியின் தேசிய தலைவர் தேவகவுடா கையெழுத்திட்டு உள்ளார். இந்த வழக்கில் சிறப்பு விசாரணை குழு விசாரிக்கிறது. விசாரணை அறிக்கை வரும் வரை சஸ்பெண்ட் உத்தரவு தொடரும். அறிக்கையில், அவர் தவறு செய்து இருப்பதாக தெரியவந்தால், கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படுவார்.

கடந்த ஐந்து, ஆறு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம், இப்போது வெளிவந்தது ஏன். இத்தனை ஆண்டுகளாக ஏன் யாரும் புகார் செய்யவில்லை. பா.ஜ.,வுடனான எங்கள் கூட்டணியை பொறுத்து கொள்ள முடியாமல், துணை முதல்வர் சிவகுமார் சதி செய்கிறார். பெண்கள் புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியிடப்பட்டு உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையில் பா.ஜ.,வை சேர்ந்த வழக்கறிஞர் தேவராஜ் கவுடா கூறுகையில், “பிரஜ்வல் ரேவண்ணாவின் முன்னாள் கார் டிரைவர் கார்த்திக், ரேவண்ணா குடும்பத்தால் தனக்கு அநீதி நடந்ததாக என்னிடம் கூறினார். பிரஜ்வலின் பென்டிரைவ் தன்னிடம் இருப்பதாக தெரிவித்தார். அந்த பென்டிரைவில் இருந்த வீடியோக்களை, என் பென்டிரைவில் ஏற்றினேன். ஆனால் வீடியோவை நான் வெளியிடவில்லை.

“அந்த பென்டிரைவ் காங்கிரஸ் தலைவர்கள் கையில் சிக்கியது. துணை முதல்வர் சிவகுமார், அவரது தம்பி சுரேஷ் கைக்கு பிரஜ்வல் வீடியோக்கள் சென்று விட்டன. நான் வீடியோ, புகைப்படங்களை வெளியிட வேண்டும் என்று நினைத்தால், சட்டசபை தேர்தலின் போதே வெளியிட்டு இருப்பேன்,” என்றார். ஆனால் தேவராஜ் கவுடா கூறியதை, பிரஜ்வலின் முன்னாள் கார் டிரைவர் கார்த்திக் மறுத்து உள்ளார்.

இதற்கிடையே, ஆபாச வீடியோ விவகாரம் குறித்து விளக்கம் அளிக்கும்படி, பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு, தேசிய பெண்கள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

பிரியங்காவுக்கு கேள்வி

கர்நாடகாவில் பா.ஜ.,வும், மதச்சார்பற்ற ஜனதா தளமும் கூட்டணி அமைத்து லோக்சபா தேர்தலில் போட்டியிடுகின்றன. ம.ஜ.த., - எம்.பி.,- பிரஜ்வல் ரேவண்ணா, பல பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் ஆபாச வீடியோக்கள், சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன. இதற்கு, கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் கடும் விமர்சனத்தை முன்வைத்து வருகிறது.இந்த விஷயத்தில் பிரதமர் மோடி தன் கருத்தை தெரிவிக்க வேண்டும் என, காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா கூறியிருந்தார்.இது குறித்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று கூறியுள்ளதாவது:பா.ஜ., எப்போதும் பெண்களை மதிக்கும் கட்சி. இந்த விஷயத்தில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.கர்நாடகாவில் தற்போது காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இது மாநிலத்தின் சட்டம் - ஒழுங்கு பிரச்னை. அங்குள்ள முதல்வர் மற்றும் துணை முதல்வரிடம், ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பிரியங்கா கேள்வி கேட்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.








      Dinamalar
      Follow us