sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பிரிட்டன் 'டிவி' நிகழ்ச்சியில் சாதித்த சிறுமிக்கு பாராட்டு

/

பிரிட்டன் 'டிவி' நிகழ்ச்சியில் சாதித்த சிறுமிக்கு பாராட்டு

பிரிட்டன் 'டிவி' நிகழ்ச்சியில் சாதித்த சிறுமிக்கு பாராட்டு

பிரிட்டன் 'டிவி' நிகழ்ச்சியில் சாதித்த சிறுமிக்கு பாராட்டு

2


ADDED : மார் 04, 2025 12:33 AM

Google News

ADDED : மார் 04, 2025 12:33 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குவஹாத்தி: பிரிட்டனில் மிகவும் பிரபலமான, 'டிவி' நிகழ்ச்சியில், இந்தியா சார்பில் பங்கேற்று, வியத்தகு நடன சாதனை படைத்துள்ள, 8 வயதே நிரம்பியுள்ள பினிதா சேத்ரி என்ற அசாம் மாநில சிறுமிக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.

'பிரிட்டன்ஸ் காட் டேலன்ட்' என்ற ரியாலிட்டி, 'டிவி' நிகழ்ச்சி, உலகம் முழுதும் மிகவும் பிரபலமானது.

அந்த நிகழ்ச்சி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. பாடகர்கள், நடனக்கலைஞர்கள், மேஜிக் கலைஞர்கள், காமெடியன்கள் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.

வெற்றி பெறுபவர்களுக்கு ஏராளமான பணமும், பிரிட்டன் அரச குடும்பத்தினர் முன் நிகழ்ச்சியை நடத்திக் காண்பிக்கும் வாய்ப்பும் கிடைக்கும்.

இந்த பிரபலமான நிகழ்ச்சியில், இந்தியா சார்பில் பங்கேற்ற, 8 வயதான பினிதா சேத்ரி என்ற சிறுமி, 3 நிமிடங்களே நடந்த நடன நிகழ்ச்சியில் அற்புதமாக நடனமாடி, பார்வையாளர்கள் மட்டுமின்றி, அந்த நிகழ்ச்சியின் நடுவர்களையும் ஆச்சர்யத்தில் கலங்க அடித்தார்.

இரும்பு இதயம்


உடலை வில்லாக வளைத்தும், முன்னும், பின்னும் காற்றில் பறந்தும் அந்த சிறுமி ஆடிய நடனங்கள் அற்புதமாக இருந்தன.

அந்த நிகழ்ச்சியை பார்த்தவர்கள், ''வாழ்நாளில் மறக்க முடியாத அளவுக்கு நடன அசைவுகளை செய்தார் அந்த சிறுமி'' என பாராட்டினர். சிறுமிக்கு உலகம் முழுதும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.

எவ்வித அச்சமும் இன்றி, சிறப்பாக ஆடிய அந்த சிறுமி, அடுத்த கட்டத்திற்கு முன்னேறியுள்ளார். அவரை, அசாம் பா.ஜ., முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா பாராட்டியுள்ளார். அவர் கூறுகையில், ''அந்த சிறுமிக்கு என் பாராட்டுகள். அவளின் விருப்பப்படி, பரிசுத்தொகையிலிருந்து விளையாட்டு சாதனங்களை வாங்குவார்,'' என்றார்.

இந்திய தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா, ''இந்தச் சிறுமியின் நடனம் உலக தரத்தில் இருந்தது. அவளின் உடல் அசைவுகள், இரும்பு இதயத்தை போலிருந்தன.

மக்களின் அன்பு


''அந்த அளவுக்கு அவர் சிறப்பாக தன் உடலை வளைத்தது, தீவிர பயிற்சியால் தான் முடியும்,'' என தெரிவித்துள்ளார். தனக்கு கிடைத்துள்ள வாழ்த்துகளுக்கு நன்றி தெரிவித்துள்ள அந்த சிறுமி, ''கடின உழைப்புடன் திறமையும் சேரும் போது, ஒரு மேஜிக் சந்தேகமே இல்லாமல் ஏற்படும்.

''இந்தியா சார்பில் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றது பெருமையாக உள்ளது. நாட்டு மக்களின் அன்பு மற்றும் ஆதரவால் தான் இதை சாதிக்க முடிந்தது,'' என கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us