புருனே, சிங்கப்பூர் பயணம் நிறைவு: நாடு திரும்பினார் மோடி
புருனே, சிங்கப்பூர் பயணம் நிறைவு: நாடு திரும்பினார் மோடி
ADDED : செப் 06, 2024 02:06 AM

புதுடில்லி: புருனே , சிங்கப்பூர் ஆகிய இரு நாடுகள் பயணம் நிறைவடைந்ததையடுத்து இரவு நாடு திரும்பினார் பிரதமர் மோடி.
ஆசியாவின் சிறிய நாடான புருனேவுடனான தூதரக உறவு, 40 ஆண்டுகளை கடந்துள்ள நிலையில், முதல் இந்தியப் பிரதமராக, நரேந்திர மோடி அங்கு அரசு முறை பயணம் மேற்கொண்டார். அந்த நாட்டின் சுல்தான் ஹசனல் போல்கியாவுடன், இரு தரப்பு உறவுகள், சர்வதேச பிரச்னைகள் குறித்து பிரதமர் மோடி பேசினார்.
பின் அங்கிருந்து மற்றொரு ஆசிய நாடான சிங்கப்பூருக்கு சென்றடைந்தார். இது, பிரதமராக அவருடைய ஐந்தாவது பயணம். சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வாங் அவரை வரவேற்று, தனிப்பட்ட முறையில் விருந்தும் அளித்தார்.
இதைத் தொடர்ந்து, இரு தலைவர்களும் நேற்று சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின்போது, திருவள்ளுவர் பெயரில், முதல் சர்வதேச கலாசார மையம் சிங்கப்பூரில் துவக்கப்பட உள்ளது இதை மிக விரைவில் அமைக்க உள்ளதாக, நம் வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இரு நாடுகள் வெற்றி பயணம் நிறைவடைந்த நிலையில் இரவு டில்லி திரும்பினார்.