ADDED : ஏப் 29, 2024 05:54 AM

கலபுரகி : ''கர்நாடகாவில் சக்தி திட்டம் நிறைவேற்றப்பட்டதால், கோவில்களுக்கு பக்தர்கள் வருகை அதிகரித்து, உண்டியல்கள் நிரம்பி வருகின்றன,'' என பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சர் பிரியங்க் கார்கே தெரிவித்தார்.
கலபுரகி லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட கொல்லுார் கிராமத்தில் நடந்த காங்கிரஸ் பிரசார கூட்டத்தில், பிரியங்க் கார்கே பேசியதாவது:
ஹிந்து மதத்துக்கு பாதுகாவலர்கள் என்று கூறிக்கொள்ளும் பா.ஜ.,வினர், ஹிந்து மதத்துக்கு அவர்களின் பங்கு பூஜ்ஜியம்.
ஆனால் காங்கிரஸ் அரசு, பெண்கள் இலவசமாக பஸ்களில் பயணிக்கும் 'சக்தி' வாக்குறுதி திட்டத்தால், கோவில்கள் மீட்டெடுக்கப்பட்டு வருகின்றன.
மாநிலத்தில் உள்ள கோவில்களுக்கு பெண்கள் செல்வதால், கோவில் உண்டியல்களில் கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் கிடைக்கிறது.
அர்ச்சகர்களின் தட்டுகளிலும் பணம் கொட்டுகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.

