ADDED : ஆக 18, 2024 11:33 PM
காமசமுத்ரா: காமசமுத்ரா போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட தொல்லம்பள்ளி என்ற கிராமத்தில் விஜயலட்சுமி என்பவரின் வீட்டிலும், கனுமன ஹள்ளி கிராமத்தில் பசப்பா என்பவர் வீட்டிலும் பூட்டை உடைத்து திருடிய ஆந்திர மாநிலம் வி.கோட்டாவை சேர்ந்த தேவேந்திரா என்ற சுரேஷ், 27, ராஜமுந்திரியை சேர்ந்த கணேஷ் குமார், 37, புவனேஷ், 33, ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
இவர்கள் வசம் இருந்த 1.60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 23.39 கிராம் தங்க நகைகளை மீட்டனர். கேசம்பள்ளி, பேத்த மங்களா, பங்கார்பேட்டை ஆகிய போலீஸ் நிலையங்களுக்கு உட்பட்ட இடங்களில் வீடுபுகுந்து திருடிய 1.95 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 200 கிராம் வெள்ளி நாணயங்கள் மற்றும் பல கம்பெனிகளின் சிகரெட் பாக்கெட்டுகள் ஆகியவை மீட்கப்பட்டன.
திருட்டுக்கு பயன்படுத்திய இரு சக்கர வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

