ADDED : ஏப் 05, 2024 11:06 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெங்களூரு: பி.எம்.டி.சி., பஸ்சில் காங்கிரசார் தேர்தல் பிரசாரம் செய்ததை, பயணியர் கண்டித்தனர்.
பெங்களூரு, ஜெயநகரில் இருந்து, விஜயநகருக்கு நேற்று காலை பி.எம்.டி.சி., பஸ் சென்று கொண்டிருந்தது.
அப்போது அதில் பயணித்த காங்கிரஸ் தொண்டர்கள், பஸ்சிலேயே தேர்தல் பிரசாரம் செய்தனர். இதற்கு சக பயணியர் ஆட்சேபம் தெரிவித்தனர். இதனால் பயணியருக்கும், தொண்டர்களுக்கும் வாக்குவாதம் நடந்தது.
'குறிப்பிட்ட வேட்பாளருக்கு ஓட்டு போடும்படி, எங்களை பலவந்தப்படுத்துவது சரியல்ல. பஸ்சில் பிரசாரம் செய்வது சரியல்ல' என, கண்டித்தனர். இதனால் பெண் தொண்டர்கள், பஸ்சில் இருந்து இறங்கி சென்றுவிட்டனர்.

