ADDED : செப் 04, 2024 11:34 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மும்பை: மஹாராஷ்டிராவில் மாநில அரசு ஊழியர்களுக்கு இணையாக தங்களுக்கும் ஊதிய உயர்வு அளிப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மஹாராஷ்டிரா பஸ் ஊழியர்கள் நேற்று முன்தினம் முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இரண்டாவது நாளாக நேற்றும் பெரும்பாலான அரசு பஸ்கள் இயங்கவில்லை.
மொத்தம் உள்ள 251 பஸ் டிப்போக்களில், 96 டிப்போக்கள் முற்றிலும் இயங்கவில்லை. மும்பை, புனே தவிர மற்ற பகுதிகளில் பஸ்கள் இயங்காததால், பயணியர் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.