ADDED : ஜூன் 25, 2024 04:51 AM
குஷால்நகர் : துப்பாக்கிச்சூட்டில் காலில் குண்டு பாய்ந்து தொழிலதிபர் காயமடைந்தார்.
குடகு மாவட்டம், குஷால்நகரில் வசிப்பவர் தொழிலதிபர் சசிகுமார், 40. இவர் நேற்று முன் தினம் மாலை, நண்பரின் பிறந்த நாள் பார்ட்டியில் பங்கேற்றிருந்தார். அப்போது ஏதோ காரணத்தால், அனுதீப் என்பவருடன் வாக்குவாதம் நடந்தது.
நள்ளிரவு பார்ட்டி முடிந்த பின், சசிகுமார் காரில் அங்கிருந்து வீட்டுக்கு புறப்பட்டார். இவரை அனுதீப்பும், அவரது நண்பர் லவகுமாரும் பின்தொடர்ந்தனர். சசிகுமாரின் வீடு அருகே, அவர் மீது அனுதீப், இரட்டை குழல் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுவிட்டு தப்பினர்.
ஒரு குண்டு கண்ணாடியை துளைத்துக் கொண்டு, சசிகுமார் காலில் பாய்ந்தது. காயமடைந்த அவர், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெறுகிறார்.
குஷால்நகர் போலீசார் விசாரணை நடத்தினர். கொப்பாவின் ஹோம்ஸ்டேவில் இருந்த அனுதீப்பை, நேற்று காலை கைது செய்தனர். சம்பவ இடத்தை எஸ்.பி., ராமராஜன், டெபுடி எஸ்.பி., கங்காதரப்பா உள்ளிட்ட அதிகாரிகள் பார்வையிட்டனர்.