தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ 3 சட்டசபை, 1 மேலவை தொகுதிக்கு இடைத்தேர்தல்

3 சட்டசபை, 1 மேலவை தொகுதிக்கு இடைத்தேர்தல்

3 சட்டசபை, 1 மேலவை தொகுதிக்கு இடைத்தேர்தல்


ADDED : ஜூன் 07, 2024 07:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 07, 2024 07:29 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: லோக்சபா தேர்தலில் போட்டியிட்ட, மூன்று எம்.எல்.ஏ.,க்கள், ஒரு எம்.எல்.சி., வெற்றி பெற்றதால், இவர்களின் தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடக்க உள்ளது.

ராம்நகர், சென்னபட்டணா ம.ஜ.த., - எம்.எல்.ஏ., குமாரசாமி, மாண்டியா லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஹாவேரியின், ஷிகாவி பா.ஜ., - எம்.எல்.ஏ., பசவராஜ் பொம்மை, ஹாவேரி லோக்சபா தொகுதியிலும்;, சன்டூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ., துக்காராம், பல்லாரி லோக்சபா தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளனர்.

அதேபோன்று, மேலவையின் தட்சிண கன்னடா - மைசூரு தொகுதி பா.ஜ., உறுப்பினராக இருந்த கோட்டா சீனிவாச பூஜாரி, உடுப்பி - சிக்கமளூரு லோக்சபா தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.

நால்வரும் எம்.பி.,க்களானதால், மூன்று சட்டசபை தொகுதிகள், ஒரு மேலவை தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் நடக்கும். இடைத்தேர்தலில், 'சீட்' பெற, இப்போதே முக்கிய கட்சிகளின் பிரமுகர்கள், 'துண்டு' போட துவங்கியுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us