ADDED : செப் 07, 2024 07:37 AM
கலபுரகி: முதல்வர் சித்தராமையா தலைமையில், வரும் 17ல் கலபுரகி மினி விதான்சவுதாவில், அமைச்சரவை கூட்டம் நடக்கவுள்ளது.
கடந்த 2013 முதல், 2018 வரை சித்தராமையா முதல்வராக இருந்தார். ஐந்து ஆண்டுகளில், அவர் பெங்களூரிலேயே அதிக முறை அமைச்சரவை கூட்டம் நடத்தினார். இதற்கு முன்பு தேவராஜ் அர்ஸ் உட்பட, பல முதல்வர்கள், பெங்களூக்கு வெளியில் அமைச்சரவை கூட்டம் நடத்தி, புதிய சம்பிரதாயத்தை துவக்கினர்.
எடியூரப்பா முதல்வராக இருந்தபோது, கலபுரகியில் அமைச்சரவை கூட்டம் நடத்தியிருந்தார். மாவட்டங்கள் இடையிலான ஏற்றத்தாழ்வை சரி செய்யவும், ஆட்சி நிர்வகிப்பை வேறு மாநிலங்களுக்கு கொண்டு செல்லவும் பெலகாவியில் சுவர்ண விதான்சவுதா கட்டப்பட்டது. ஆண்டுக்கு ஒரு முறை இங்கு, சட்டசபை கூட்டம் நடத்தப்படுகிறது.
கலபுரகியில் அமைச்சரவை கூட்டம் நடத்தி, இப்பகுதி மக்களின் பிரச்னைகள் குறித்து ஆலோசித்து, தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக உள்ளது.
இரண்டாவது முறையாக, முதல்வரான சித்தராமையா, வரும் 17ம் தேதி மாலை 4:00 மணி அளவில் கலபுரகியில் அமைச்சரவை கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ளார்.