டில்லி விமான நிலையத்தில் ரூ.22 கோடி போதைப்பொருள் பறிமுதல்: சுங்கத்துறை அதிரடி
டில்லி விமான நிலையத்தில் ரூ.22 கோடி போதைப்பொருள் பறிமுதல்: சுங்கத்துறை அதிரடி
ADDED : ஜூலை 02, 2024 02:59 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: டில்லி விமான நிலையத்தில் ரூ.22 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
டில்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக, சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. இன்று (ஜூலை 02) விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள், பயணிகளின் உடைமைகளை சோதனை செய்தனர்.
அப்போது, கேமரூன் நாட்டை சேர்ந்த பயணி ஒருவரின் உடைமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். அவரிடம் இருந்து 1,472.5 கிராம் எடை கொண்ட கோகைன் போதைப்பொருளை பறிமுதல் செய்து, அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இதன் சந்தை மதிப்பு ரூ.22 கோடி.