எந்த அரசும் கம்பிகளுக்குப் பின்னால் இருந்து இயங்க முடியுமா?: மத்திய அமைச்சர் கேள்வி
எந்த அரசும் கம்பிகளுக்குப் பின்னால் இருந்து இயங்க முடியுமா?: மத்திய அமைச்சர் கேள்வி
ADDED : ஏப் 01, 2024 03:19 PM

புதுடில்லி: எந்த அரசும் கம்பிகளுக்குப் பின்னால் இருந்து இயங்க முடியுமா? என கெஜ்ரிவாலுக்கு மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கேள்வி எழுப்பி உள்ளார்.
இது குறித்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: 12-13 ஆண்டுகளுக்கு முன்பு, அன்னா ஹசாரே ராம்லீலா மைதானத்தில் ஒரு இயக்கத்தைத் துவக்கினார். ஊழலற்ற ஆட்சியை அவர் விரும்பினார். மதுபான ஊழல் குறித்த அவரிடம் கருத்துகளை கேட்க வேண்டும். அப்போது ஆட்சியில் இருந்தவர் யார்?. நேற்று இண்டியா கூட்டணி கூட்டத்தில் மேடையில் இருந்தவர்கள் தான். எந்த அரசும் கம்பிகளுக்குப் பின்னால் இருந்து இயங்க முடியுமா?.
ஏற்கனவே மூன்று முன்னாள் அமைச்சர்களை சிறையில் வைத்திருக்கும் அரசு. இண்டியா கூட்டணி பொதுக்கூட்டத்தில் ராகுல், ஆட்சேபனைக்குரிய பல விஷயங்களை கூறியுள்ளார். மின்னணு ஓட்டு இயந்திரம் இல்லாமல் தேர்தலில் பா.ஜ., வெற்றி பெற முடியாது என ராகுல் கூறியது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளோம். இது போன்ற கீழ்த்தரமான கருத்துகளை பேசுபவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

