கெஜ்ரிவால் பணி செய்யலாமா? விளக்கம் கேட்கிறது சுப்ரீம் கோர்ட்
கெஜ்ரிவால் பணி செய்யலாமா? விளக்கம் கேட்கிறது சுப்ரீம் கோர்ட்
ADDED : செப் 07, 2024 02:27 AM

புதுடில்லி, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மதுபான கொள்கை ஊழல் வழக்கில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இருப்பினும், சிறையில் இருந்தபடியே முதல்வர் பணிகளை அவர் மேற்கொண்டு வருகிறார்.
இதன் காரணமாக, டில்லி சிறையில் அடைக்கப்பட்டுள்ள சில கைதிகளின் தண்டனை குறைப்பு கோப்புகளில், முதல்வர் கையெழுத்திடுவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது, 'டில்லி முதல்வர் கெஜ்ரிவால் சிறையில் இருந்து தன் பணிகளைச் செய்ய ஏதேனும் தடை உத்தரவு உள்ளதா? இது நுாற்றுக்கணக்கான வழக்குகளை பாதிக்கும் என்பதால், இதை ஆராய விரும்புகிறோம்' என, கேள்வி எழுப்பினர்.
அரசிடம் இருந்து இது தொடர்பான அறிவுறுத்தல்களை பெற்ற பின், மீண்டும் நீதிமன்றத்தை தொடர்பு கொள்வதாக கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பாத்தி தெரிவித்தார். இதை தொடர்ந்து வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.