ADDED : ஆக 05, 2024 12:39 AM

தேர்தல் பிரசாரத்தின் போது, பிரதமர் மோடியின் பெயரைச் சொல்லி ஓட்டு கேட்ட உத்தவ் தாக்கரே வெற்றி பெற்ற பின், பா.ஜ., முதுகில் குத்தி துரோகம் செய்தார். இப்படிப்பட்டவர் தான், பா.ஜ., அதிகாரத்துக்கு ஆசைப்படுவதாக தற்போது புழுதி வாரி துாற்றுகிறார்.
சாய்னா, செய்தி தொடர்பாளர், பா.ஜ.,
என்.டி.ஏ., லாபம் எங்கே?
நீட் உள்ளிட்ட தேர்வுகளை நடத்தும், என்.டி.ஏ., எனப்படும் தேசிய தேர்வு முகமை, கடந்த ஆறு ஆண்டுகளில், 448 கோடி ரூபாய் நிகர லாபம் ஈட்டியுள்ளது. அதே நேரத்தில் இந்த லாபத்தை, தேர்வுகளை முறையாக நடத்துவதற்கோ, என்.டி.ஏ.,வின் கட்டமைப்பை பலப்படுவதற்கோ பயன்படுத்தாதது கவலை அளிக்கிறது.
ஜெய்ராம் ரமேஷ், பொதுச்செயலர், காங்கிரஸ்
முதலீடு வந்தால் சரிதான்!
தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையில், ஒரு மிகப் பெரிய குழு, முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்கா செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக அவர்களை வாழ்த்துகிறேன். எப்படியாவது தெலுங்கானாவுக்கு முதலீடுகளை ஈர்த்து வந்தால் சரி தான்.
கே.டி.ராமாராவ், செயல் தலைவர், பாரத் ராஷ்ட்ர சமிதி