ADDED : மார் 22, 2024 05:49 AM

துமகூரு: துமகூரு லோக்சபா தொகுதி காங்கிரஸ், பா.ஜ., வேட்பாளர்கள், மடங்களுக்கு மாறி, மாறி சென்று, மடாதிபதிகளை சந்தித்து ஆசி பெறுகின்றனர்.
லோக்சபா தேர்தலில் துமகூரு லோக்சபா தொகுதி பா.ஜ., வேட்பாளராக சோமண்ணாவும், காங்கிரஸ் வேட்பாளராக முத்தஹனுமே கவுடாவும் அறிவிக்கப்பட்டு உள்ளனர். வேட்பாளராக அறிவிப்பு வெளியானதும், துமகூரில் உள்ள சித்தகங்கா, மைசூரில் உள்ள சுத்துார் மடத்திற்கு சென்று, மடாதிபதிகளை சந்தித்து சோமண்ணா ஆசி பெற்றார்.
'உனக்கு நான் குறைந்தவன் இல்லை' என்று, அவருக்கு சவால் விடும் வகையில், முத்தஹனுமே கவுடாவும் மடங்களுக்கு சென்று, மடாதிபதிகளை சந்தித்து ஆசி பெற்று வருகிறார்.
துமகூரு சித்தகங்கா, மாண்டியா ஆதிசுஞ்சனகிரி, சித்ரதுர்காவில் உள்ள வால்மீகி, பஞ்சாரா, போவி சமூக மடங்களுக்கும் சென்று, மடாதிபதிகளிடம், ஆசி பெற்று உள்ளார்.
'மடத்தின் பக்கமே செல்லாத, காங்கிரஸ் தலைவர்களுக்கு, தேர்தல் நேரத்தில் தான் செல்ல தோன்றுகிறதோ' என்று, எதிர் தரப்பினர் கிண்டல் அடிக்கின்றனர்.

