என்னா ஒரு வில்லத்தனம்; அடுக்குமாடி குடியிருப்பில் கஞ்சா தோட்டம்; சேட்டை வாலிபரை தட்டி தூக்கிய போலீசார்!
என்னா ஒரு வில்லத்தனம்; அடுக்குமாடி குடியிருப்பில் கஞ்சா தோட்டம்; சேட்டை வாலிபரை தட்டி தூக்கிய போலீசார்!
UPDATED : நவ 13, 2024 10:33 AM
ADDED : நவ 13, 2024 07:58 AM

லக்னோ: கிரேட்டர் நொய்டாவில் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, அடுக்குமாடி குடியிருப்பில் கஞ்சா பயிரிட்டு வந்த, வாலிபரை போலீசார் கைது செய்தனர். பல லட்சம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
உத்தரபிரதேச மாநிலம், கிரேட்டர் நொய்டாவில் அடுக்குமாடி குடியிருப்பில் கஞ்சா பயிரிட்டு, விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அடுக்குமாடி குடியிருப்பிற்குள் நுழைந்த போலீசார் சோதனை நடத்தினர். அப்போது 50க்கும் மேற்பட்ட தொட்டிகளில், கஞ்சா செடி பயிரிடப்பட்டு இருந்ததை போலீசார் கண்டுப்பிடித்தனர்.
இது தொடர்பாக, நொய்டாவை சேர்ந்த ராகுல் சவுத்ரி என்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, வீட்டில் கஞ்சா தோட்டத்தை வளர்த்து வந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து கிரேட்டர் நொய்டா துணை கமிஷனர் சாத் மியா கான் கூறியதாவது:
அடுக்குமாடி குடியிருப்பில் சட்டவிரோதமாக கஞ்சா செடி பயிரிடப்பட்டு இருப்பதாக தகவல் கிடைத்தது. இந்த சோதனையில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள கஞ்சா செடி பறிமுதல் செய்யப்பட்டது. மீரட்டை சேர்ந்த ராகுல் சவுத்ரி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது குறித்து விசாரித்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.