ADDED : ஆக 16, 2024 11:03 PM

சிக்கபல்லாபூர் : கார் கண்ணாடியை உடைத்து, 2 லட்சம் ரூபாயை திருடி சென்ற, மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
பெங்களூரு ரூரல் தொட்டபல்லாபூரை சேர்ந்தவர் சிவகுமார். தொழில் அதிபரான இவர், மர அறுவை ஆலை நடத்துகிறார்.
மரம் வெட்டுவதற்கு புதிய இயந்திரம் வாங்குவதற்கு, நேற்று முன்தினம் மாலை தொட்டபல்லாபூரில் இருந்து, சிக்கபல்லாபூரின் சிந்தாமணிக்கு காரில் சென்றார்.
சிந்தாமணி டவுனில் உள்ள ஹோட்டல் முன்பு காரை நிறுத்திவிட்டு, சாப்பிட சென்றார். காரின் அருகே வந்த மர்மநபர் ஒருவர், காரின் கண்ணாடியை உடைத்தார். இருக்கையில் இருந்த பையை எடுத்து கொண்டு தப்பினார்.
சிவகுமார் திரும்பி வந்து பார்த்த போது, பைக்குள் இருந்த 2 லட்சம் ரூபாய் திருடப்பட்டது தெரிந்தது. சிந்தாமணி போலீசில் புகார் அளித்தார். கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்த போது, மர்மநபர் ஒருவர் கார் கண்ணாடியை உடைத்து, பணம் எடுக்கும் காட்சிகள் பதிவாகி இருந்தன. ஆனால் அந்த நபரின் முகம் தெளிவாக தெரியவில்லை. அவரை போலீசார் தேடுகின்றனர்.

