கெஜ்ரிவாலை வரவேற்ற பட்டாசு வெடித்த கட்சியினர் மீது வழக்கு
கெஜ்ரிவாலை வரவேற்ற பட்டாசு வெடித்த கட்சியினர் மீது வழக்கு
ADDED : செப் 14, 2024 08:45 PM
புதுடில்லி:சிறையில் இருந்து ஜாமினில் வந்த முதல்வர் கெஜ்ரிவாலை வரவேற்கும் நிகழ்ச்சியில் பட்டாசு வெடித்தது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் திஹார் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, உச்ச நீதிமன்றம் நேற்று முன் தினம் ஜாமின் வழங்கியது.
அன்று மாலையே அவர் சிறையில் இருந்து வெளியே வந்தார். சிறை வாசலில் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரண்டு நின்று வரவேற்றனர்.
அதேபோல, வடக்கு டில்லி சிவில் லைன்ஸில் உள்ள கெஜ்ரிவால் பங்களா அருகிலும் ஏராளமான கட்சியினர் திரண்டிருந்தனர். கெஜ்ரிவால் வரும்போது அதிரடி பட்டாசுகளைக் கொளுத்தி வரவேற்றனர்.
குளிர்காலத்தில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் வகையில் தலைநகர் டில்லியில் பட்டாசு உற்பத்தி, விற்பனை மற்றும் பயன்பாட்டுக்கு தடை விதித்து டில்லி அரசு கடந்த 9ம் தேதி உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில், முதல்வர் வீட்டருகிலேயே பட்டாசு வெடித்த ஆம் ஆத்மி கட்சியினர் மீது, சிவில் லைன்ஸ் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.