ADDED : பிப் 22, 2025 09:33 PM
ஸ்ரீராம் காலனி: வடகிழக்கு டில்லியில் உள்ள அரசு பள்ளியின் 1ம் வகுப்பு மாணவனை அடித்து காயப்படுத்தியதற்காக ஆசிரியர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
வடகிழக்கு டில்லியின் ஸ்ரீ ராம் காலனியில் நகர் நிகம் பள்ளி உள்ளது. இங்கு 1ம் வகுப்பு மாணவனை ஆசிரியர் அடித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மாணவருக்கு வெளிப்புற காயம் ஏற்படவில்லை.
எனினும், காது வலிப்பதாக மாணவர் கூறியதை அடுத்து, ஜே.பி.சி., மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இதுகுறித்து மாணவரின் பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
மருத்துவமனையில் மாணவரை பரிசோதித்த டாக்டர்கள், மாணவரின் காதில் உள்ளே ரத்தக் கசிவு இருப்பதை கண்டறிந்தனர்.
இந்த சம்பவம், 17ம் தேதி நடந்தது. எனினும் நேற்று முன்தினம் தான் வெளிச்சத்துக்கு வந்தது. புகாரின்பேரில் ஆசிரியர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். விசாரணை நடந்து வருகிறது.

