ADDED : மே 02, 2024 06:25 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஹாவேரி: லோக்சபா தேர்தலில், ஹாவேரி தொகுதியில் பசவராஜ் பொம்மை, பா.ஜ., வேட்பாளராக போட்டியிடுகிறார். பிரசாரமும் செய்து வருகிறார்.
சில நாட்களுக்கு முன்பு, ஹாவேரி நகரின், சிந்தகி சாந்தா வீரேஸ்வரா ஆயுர்வேதிக் கல்லுாரி, மருத்துவமனை வளாகத்தில் ஆலோசனை நடத்தினார்.
இதில் கல்லுாரி நிர்வாகத்தினர், பிரின்ஸ்பால், ஊழியர்கள் பங்கேற்றனர். இவர்களிடம் தனக்கு ஓட்டு போடும்படி, பசவராஜ் பொம்மை கேட்டுக்கொண்டார்.
கூட்டம் நடத்த தேர்தல் அதிகாரியிடம் முன்கூட்டியே அனுமதி பெறவில்லை. தேர்தல் விதிகளை மீறியதால், பசவராஜ் பொம்மை மீது வழக்குப் பதிவாகியுள்ளது.

