ADDED : மார் 22, 2024 01:20 AM
புதுடில்லி:தலைநகர் டில்லியில், 88 சதவீத மக்கள் துாங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு வரை செல்போன் பயன்படுத்துவது ஓர் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
தேசிய தலைநகர் பிராந்தியத்தில் வாழும் மக்களின் செல்போன் பயன்பாடு குறித்து தனியார் இணையதளம் ஆய்வு நடத்தியது. ஏழாவது பதிப்பின் ஆய்வு குறித்த முடிவுகளை அந்த இணையதளம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, தலைநகர் பிராந்தியத்தில் வாழும் 48 சதவீத மக்கள் இரவு 11:00 மணிக்குப் பிறகே துாங்கச் செல்கின்றனர்.
புதுடில்லியின் 88 சதவீத மக்கள், துாங்குவதற்கு சில நிமிடங்கள் முன்பு வரை செல்போனை பயன்படுத்துவது தெரிய வந்துள்ளது.
குருகிராமில், 95 சதவீத மக்களுக்கு இந்தப் பழக்கம் இருக்கிறது.
தலைநகரின் 52 சதவீத மக்கள், தங்களுக்கு காலை புத்துணர்வுடன் விடிவதில்லை என்று தெரிவித்துள்ளனர்.
துாங்க செல்வதற்கு முன்பு டிஜிட்டல் சாதனங்கள் பயன்படுத்துவதை தவிர்த்தால், நன்றாக துாங்க முடியுமென, 36 சதவீத டில்லி மக்களும் 41 சதவீத குருகிராம் மக்களும் நம்புகின்றனர்.

