ADDED : ஜூன் 16, 2024 07:33 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெங்களூரு: ''மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, எப்போது வேண்டுமானாலும் கவிழும்,'' என, காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்,
பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான, தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, தவறான வழியில் அமைந்துள்ளது. எப்போது வேண்டுமானாலும் கவிழலாம். மோடி அரசுக்கு பெரும்பான்மை இல்லை.
தன் கூட்டணி கட்சிகளை தக்கவைத்துக் கொள்ள, பா.ஜ., போராடுகிறது. மோடி பெரும்பான்மையுடன் ஆட்சி நடத்த, மக்கள் உத்தரவிடவில்லை. எனவே இந்த அரசு அதிக நாட்கள் நீடிக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.