தமிழகத்துக்கு மத்திய அரசு ரூ.5,700 கோடி விடுவிப்பு
தமிழகத்துக்கு மத்திய அரசு ரூ.5,700 கோடி விடுவிப்பு
ADDED : ஜூன் 11, 2024 01:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி, மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது:
மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழக்கமாக வழங்கும் வரி பகிர்வு மற்றும் கூடுதல் தவணைத் தொகை விடுவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அனைத்து மாநிலங்களுக்கும், இந்த மாதத்திற்கு 1,39,750 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது.
இதில் தமிழகத்துக்கு, 5,700 கோடி ரூபாய் வரி பகிர்வு அளிக்கப்பட்டு உள்ளது. இதன் வாயிலாக, மாநிலங்கள் சமூக நலத்திட்டங்களையும், உட்கட்டமைப்புத் திட்டங்களையும் மேற்கொள்ள முடியும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.