கர்நாடகாவின் 11 மாவட்டங்களில் இன்று இடியுடன் மழைக்கு வாய்ப்பு
கர்நாடகாவின் 11 மாவட்டங்களில் இன்று இடியுடன் மழைக்கு வாய்ப்பு
ADDED : மே 28, 2024 06:07 AM
பெங்களூரு: பெங்களூரு உட்பட மாநிலத்தின் 11 மாவட்டங்களில் இன்று, இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கர்நாடகாவின் கடந்த சில நாட்களாக அடிக்கடி மழை பெய்து வருகிறது. கடலோர பகுதிகள், மலை பிரதேசங்கள் மட்டுமின்றி, பெங்களூரு சுற்று வட்டாரத்திலும் பெய்து வருகிறது.
மேலும் மைசூரு, சாம்ராஜ்நகர், மாண்டியா, ராம்நகர், குடகு என காவிரி நீர்பிடிப்பு பகுதிகளிலும் தொடர் மழை பெய்வதால், கே.ஆர்.எஸ்., கபினி, ஹாரங்கி, ஹேமாவதி அணைகளின் நீர் மட்டம் உயர்ந்து வருகின்றன.
இதற்கிடையில் 11 மாவட்டங்களில் இன்று மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக, வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தட்சிண கன்னடா, உடுப்பி, உத்தர கன்னடா ஆகிய கடலோர பகுதிகளில் சாதாரண அல்லது இடியுடன் கூடிய மழையும்; பெங்களூரு ரூரல், பெங்., நகரம், சிக்கமகளூரு, தாவணகெரே, ஹாசன், குடகு, ராம்நகர், ஷிவமொகா ஆகிய மாவட்டங்களில் 30 - 40 கி.மீ., வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய கன மழையும், சில இடங்களில் இடியுடன் கூடிய மழையும் பெய்யும் வாய்ப்பு உள்ளது.
மேலும், பெலகாவி, தார்வாட், ஹாவேரி ஆகிய மாவட்டங்களில், கன மழையும், சில இடங்களில் இடியுடன் கூடிய மழையும் பெய்யும். அதே வேளையில், பாகல்கோட், பீதர், கதக், கலபுரகி, கொப்பால், ராய்ச்சூர், விஜயபுரா, யாத்கிர், பல்லாரி, சாம்ராஜ்நகர், சிக்கபல்லாப்பூர், சித்ரதுர்கா, கோலார், மாண்டியா, மைசூரு, துமகூரு, விஜயநகரா ஆகிய 17 மாவட்டங்களில், அனல் காற்று வீசும் வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.