பெண்களுக்கு இலவச வீடு சந்திரபாபு நாயுடு வாக்குறுதி
பெண்களுக்கு இலவச வீடு சந்திரபாபு நாயுடு வாக்குறுதி
ADDED : ஏப் 27, 2024 01:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அமராவதி, ஆந்திராவில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு மே 13ல், லோக்சபா மற்றும் மாநில சட்டசபைக்குள் தேர்தல் நடக்கிறது.
மீண்டும் ஆட்சியை தக்க வைக்க ஜெகன் மோகன் ரெட்டியும், அவரை வீழ்த்தி ஆட்சியை கைப்பற்ற தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடுவும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சமீபத்தில் ஸ்ரீகாகுளத்தில் நடந்த பிரசார கூட்டத்தில், சந்திரபாபு நாயுடு பேசியதாவது: மாநிலத்தில் நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் ஏழை பெண்களுக்கு, 800 சதுர அடியில் இலவசமாக வீடு கட்டி தரப்படும்.
முதியோர் உதவித் தொகை மாதம் 4,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் தோறும் 6,000 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.

